குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் பாட தேர்வை 21,902 பேர் எழுதினர்


குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் பாட தேர்வை 21,902 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 10:39 PM GMT)

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தமிழ் பாட தேர்வை 21,902 பேர் எழுதினார்கள்.

நாகர்கோவில்,

பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்காக 4 கல்வி மாவட்டங்களிலும் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் நாளில் தமிழ் பாடத்தேர்வு நடந்தது. குமரி மாவட்டத்தில் 22,688 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத போவதாக கல்வி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று நடந்த தமிழ் பாட தேர்வை எழுத 786 மாணவர்கள் வரவில்லை. இதனால் 21 ஆயிரத்து 902 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மாற்றுத்திறன் படைத்த 64 மாணவ- மாணவிகளும் தேர்வு எழுதினர்.

கண்காணிப்பு

இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் தலைமையில், கல்வி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு பறக்கும் படையினர் கண்காணித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்கள் அனைத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட விடைத்தாள் சேகரிப்பு மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், தக்கலை கல்வி மாவட்டத்துக்கு ஆசாரிபள்ளம் பெல்பீல்டு பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு முன்சிறை ஜெனட் மெட்ரிக் பள்ளியிலும், திருவட்டார் கல்வி மாவட்டத்துக்கு திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும் விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story