அயோத்தியாப்பட்டணம் அருகே கோழி கடைக்காரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


அயோத்தியாப்பட்டணம் அருகே கோழி கடைக்காரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 March 2020 10:15 PM GMT (Updated: 7 March 2020 10:09 PM GMT)

அயோத்தியாப்பட்டணம் அருகே கோழி கடைக்காரர் வீட்டில் 18 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அயோத்தியாப்பட்டணம்,

அயோத்தியாப்பட்டணம் அருகே கூட்டாத்துப்பட்டி ஆலமரத்து பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 59). இவர் அம்மாபேட்டையில் கோழி கடை வைத்துள்ளார். இவருடைய மகன் சுதன். இவருக்கு ஜாதகத்தில் தோ‌‌ஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தோ‌‌ஷத்தை கழிப்பதற்காக கடந்த 5-ந் தேதி கும்பகோணம் பகுதியில் உள்ள நாகேஸ்வரம் கோவிலுக்கு கோபால் குடும்பத்துடன் சென்றார். அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் கோபால் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதுமட்டுமின்றி பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதும் கோபாலுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாபிரிதர்‌ஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

விசாரணையில், வீடு பூட்டி கிடப்பதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் மாடியின் வழியாக உள்ளே புகுந்து, அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டது. நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story