குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 23-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 23-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2020 5:00 AM IST (Updated: 11 March 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 23-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் கோட்டை பகுதியில் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டம் நேற்று 23-வது நாளாக நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் தொடரும்

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை மக்கா மஜீத் தலைமை இமாமும், ஜம்இய்யத் உலமா மாநில தலைவருமான முகமது மன்சூர் காசிம் கலந்து கொண்டு பேசினார்.

இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நாளை (இன்று) சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் கோட்டையில் பெண்கள் அமைப்பு சார்பில் நடைபெறும் போராட்டம் தொடரும். மேலும் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்கள்.


Next Story