மகளிர் குழுக்களுக்கு ரூ.48 கோடி கடன் உதவி - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
மகளிர் குழுக்களுக்கு ரூ.48 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
பெண்களின் சம உரிமை என்ற நிலை மாறி இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அதிக அளவு உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை 9 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிகள் ஒருங்கிணைந்து கடனுதவிகள் வழங்கி உள்ளன.
கடந்த ஆண்டு ரூ.48 கோடிக்கு கடனுதவி வழங்கபட்டது. மேலும், தொழிற்பயிற்சி மற்றும் வங்கிக்கடனும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாவட்ட சுய உதவி குழு தமிழகத்தில் முதன்மை இடத்தை பெற்று அதற்குரிய விருதையும் மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளது.
தற்போது ஒவ்வொரு பகுதியிலும் வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு வீடு தேவைப்படுபவா்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எங்கேனும் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால், மாவட்ட சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு, பாடல் போட்டி, குழுப்பாடல், சுலோகம் போன்றவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் பழனீஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், வருவாய் கோட்டாட்சியா் சிந்து, மாவட்ட சமூகநல அலுவலா் வசந்தா, கலெக்டரின் நோ்முக உதவியாளர்கள் மேரிதபிதாள், சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவன அமைப்புகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story