கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு


கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 9:41 PM GMT)

கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திருவாரூர்,

கொரடாச்சேரி பேரூராட்சி தி.மு.க. செயலாளர் கலையரசன் மரணமடைந்தார். இந்தநிலையில் நேற்று கொரடாச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

அப்போது கலையரசனின் சகோதரரும், திருவாரூர் எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணனுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் நீலமேகம், துரை.சந்திரசேகரன், ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

பேட்டி

திருவாரூர் நகர் பகுதியில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சரியாக எடுக்கவில்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என ரஜினி கூறிய கருத்துக்கு மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன் னாள் அமைச்சர் மதிவாணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story