ரேஷன் கடையில் ரூ.1000-நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ. வழங்கினார்


ரேஷன் கடையில் ரூ.1000-நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 7 April 2020 3:00 AM IST (Updated: 7 April 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணமாக பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ரூ.1000 மற்றும் பொருட்களை வழங்கினார்.

சத்தியமங்கலம், 

கொரோனாவால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாததால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்பேரில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணமாக பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ரூ.1000 மற்றும் பொருட்களை வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ.வுடன் ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, சத்தியமங்கலம் நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ் ஆகியோர் இருந்தனர்.

Next Story