மது விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது


மது விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2020 9:45 PM GMT (Updated: 6 April 2020 9:37 PM GMT)

மது விற்ற பெண்கள் உள்பட 5 பேரை வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட போலீசார் திருக்கழுக்குன்றம் சரகத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நேற்று காலை ரோந்து சென்றனர்.

அப்போது ஈசூர் கிராமம் அடுத்த வல்லிபுரம் பாலாற்று பகுதியில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த லட்சுமி(56) என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் குன்னப்பட்டு கிராமம் ரைஸ்மில் அருகே மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த இந்திரா(60) என்பவரையும், வெண்பாக்கம் அருகே சுடுகாடு ஓரத்தில் மது விற்பனைக்கு வைத்திருந்த பூபாலன்(28) என்பவரையும், ஆனூர் கிராமம் பாலாற்றின் ஓரம் மது விற்ற ருத்திரகோட்டி(29) மற்றும் கோரப்பட்டு கிராம ஏரிக்கரையில் மது விற்ற அஞ்சலை(50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story