கோடையில் குளிர்ச்சி தரும் மண்பானைகளை வாங்க மக்கள் ஆர்வம்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கோடையில் குளிர்ச்சி தரும்மண்பானைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
கறம்பக்குடி,
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கோடையில் குளிர்ச்சி தரும்மண்பானைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
மண்பானைகள்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலால் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏழைகளின் ‘பிரிட்ஜ்’ என அழைக்கப்படும் இந்த மண் பானைகள் இயற்கையாகவே தண்ணீரை குளிரூட்டும் தன்மை கொண்டவை. இதில் மருத்துவ குணமும் அடங்கி உள்ளதால் குளிர்ச்சி தரும் மண்பானைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
தாகம் தணிக்க...
இது குறித்து மண்பானை விற்பனை செய்யும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், “கொரோனா வைரசின் தாக்கத்தால் ஊரடங்கின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் ரத்தானதால் மண்பொம்மைகள், மண்பாண்டங்கள் விற்பனை இன்றி எங்கள் வாழ்வாதாரமே பறிபோய் விட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தாகம் தணிப்பதற்காக மண்பானைகளை மட்டும் மக்கள் வாங்கி செல்கின்றனர். நல வாரிய உதவிகள் எதுவும் எங்கள் பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.
Related Tags :
Next Story