மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார் + "||" + In Namakkal, the Collector advised to go with one of the sudden vehicle test motorcycles

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்
நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் நாமக்கல் ரெங்கர் சன்னதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மெகராஜ் திடீரென பிரதான சாலையில் தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் நபர்களை இறக்கிவிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
2. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.
3. சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்யும் பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சரக்கு வேன் டிரைவர் கைது
புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வேன் டிரைவரை கைது செய்தனர்.
5. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.