உறவுகள் மீதான கசப்பை தனிமைபடுத்துங்கள் நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்


உறவுகள் மீதான கசப்பை தனிமைபடுத்துங்கள் நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 May 2020 11:37 PM GMT (Updated: 20 May 2020 11:37 PM GMT)

இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். தனது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி தொடங்கியதும் அவர் கேமராவை பார்த்து புன்னகைக்கிறார். பின்னர் அவர் பேசும்போது, நமது இதயத்தில் மற்றவர்கள் மீது என்ன கசப்பை வைத்திருந்தாலும் அதை தனிமைப்படுத்துவோம். இதனால் நமது உறவுகள் வென்டிலேட்டர்களுக்கு செல்வதை தடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை ஜூகுவில் உள்ள தனது ஜல்சா பங்களா வீட்டு முன் பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவர்களின் சேவைக்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story