மாவட்ட செய்திகள்

தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் + "||" + Safety equipment for medical staff on behalf of Bharat State Bank of Dharmapuri

தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தர்மபுரி,  

தர்மபுரி பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. 

 இதில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓசூர்மண்டல மேலாளர் ஆர்.மணிவண்ணன் கலந்து கொண்டு டாக்டர்கள், பணியாளர்களுக்கான பாதுகாப்பு சீருடைகள் மற்றும் உபகரணங்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதியிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், வங்கியின் முதன்மை மேலாளர் மோகன், மேலாளர் வெங்கடேசன் மற்றும் வங்கி பணியாளர்கள், மருத்துவத்துறையினர் கலந்து கொண்டனர்.