ஈரோட்டில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் மேலும் ஒருவர் பலியானார்.
ஈரோடு,
ஈரோடு திருநகர் காலனி முத்துமாரியம்மன் கோவில் நீரேற்று நிலையம் பகுதியை சேர்ந்த 58 வயது முதியவர் நேற்று கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தார். ஏற்கனவே இவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதற்கிடையே 58 வயது முதியவருக்கும் உடல்நிலை பாதிப்பு அடைந்தார். அவரை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மரணம்
இந்தநிலையில் அவர் நேற்று மரணம் அடைந்தார். இவர் திருப்பூருக்கு அடிக்கடி சென்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்து உள்ளது. முன்னதாக முத்துமாரியம்மன் கோவில் நீரூற்று நிலையம் ரோடு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Tags :
Next Story