பிளஸ்-2 தேர்வு முடிவு: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 90.62 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவு: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 90.62 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 1:24 AM GMT (Updated: 2020-07-17T06:54:02+05:30)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 90.62 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சீபுரம்,

பள்ளிக் கல்வித்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வினை காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த 43 ஆயிரத்து 451 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பொது பாடத்தேர்வில் 41 ஆயிரத்து 842 மாணவ-மாணவிகளும், தொழில் பாடப்பிரிவில் 1,609 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 39 ஆயிரத்து 375 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 0.72 அதிகம் ஆகும். இந்த ஆண்டு மாணவிகள் 93.40 சதவீதமும், மாணவர்கள் 87.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் சதவீதம் மாணவர்களை விட 6.15 சதவீதம் அதிகம். 109 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த தகவலை முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Next Story