மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை + "||" + Nagercoil jail inmate interrogates 150 people, including Corona prison officials

நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை

நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை
நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு சளி, மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ், அங்கு வேலை செய்த 2 பிளம்பர்கள், ஒரு காண்டிராக்டர் ஆகியோரும் அடங்குவர்.


நோய் பாதித்த பிளம்பர்கள் வேலை செய்த இடத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆண் மருத்துவ அதிகாரியும், பெண் மருத்துவ அதிகாரியும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கைதிக்கு கொரோனா

இதேபோல் திருவட்டார், பொன்மனை, மங்கலக்குன்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 போலீசாரும், குழித்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், புதுக்கடை மற்றும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட ஜெயிலில் கைதியாக உள்ள தக்கலை பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

அதிகாரிகளுக்கு பரிசோதனை

அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் கின்சால் தலைமையில் மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் மாவட்ட ஜெயிலுக்குள் சென்று கைதி அடைக்கப்பட்டு இருந்த அறையை கிருமி நாசினி தெளித்து பூட்டினர். சிறை வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த கைதியுடன் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் வேறு, வேறு அறைகளில் தனிமைப்படுத்தப் பட்டார்கள். மேலும் சிறையில் உள்ள கைதிகள், சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் என 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரிகளை மாநகராட்சி நகர்நல மையங்களைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் சேகரித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிவரும்.

பரவியது எப்படி?

மாவட்ட ஜெயிலுக்கு வந்து செல்லும் போலீசார் மூலமாக கைதிக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளது என்று மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தெரிவித்தார். ஜெயிலுக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அங்குள்ள கைதிகளும், சிறைத்துறையினரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. கொரோனாவில் இருந்து மீண்டனர்: ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
கொரோனாவில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக, கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
3. மராட்டியத்தில் ஒரேநாளில் 23,371 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் 180 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 23 ஆயிரத்து 371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 180 பேர் உயிரிழந்தனர்.
4. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.