பெரம்பலூரில் மேலும் 27 பேருக்கு கொரோனா அரியலூரில் 17 பேருக்கு தொற்று


பெரம்பலூரில் மேலும் 27 பேருக்கு கொரோனா   அரியலூரில் 17 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 31 July 2020 6:04 AM GMT (Updated: 31 July 2020 6:04 AM GMT)

பெரம்பலூரில் மேலும் 27 பேரும், அரியலூரில் 17 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் 422 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். 273 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்றும் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தழுதாழையை சேர்ந்த 27 வயது பெண், அடைக்கம்பட்டியை சேர்ந்த 34 வயது ஆண், நெய்குப்பையை சேர்ந்த 59 வயது ஆண், அவருடைய 49 வயதுடைய மனைவி, பெரம்பலூரை சேர்ந்த 27 வயது பெண், வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகரை சேர்ந்த 72 வயது மூதாட்டி, மின்நகரை சேர்ந்த 58 வயது பெண், அவருடைய 35 வயது மகன், அரணாரையை சேர்ந்த 35, 25 வயதுடைய ஆண்கள், 5 வயது ஆண் குழந்தை, 75 வயது மூதாட்டி, ஏ.வி.ஆர். நகரை சேர்ந்த 20 வயது ஆண், வடக்கு காலனியை சேர்ந்த 75 வயது மூதாட்டி உள்பட மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 209 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருக்கிறது.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, பெரியார் நகரை சேர்ந்த 19 வயது ஆண், கபேரியல் தெருவை சேர்ந்த 49 வயது பெண், குறிஞ்சகுளம் தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி, அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 20 வயது ஆண், குறிச்சிகுளத்தை சேர்ந்த 22 வயது பெண், உடையார்பாளையம் வாணிபர் தெருவை சேர்ந்த 25 வயது ஆண் உள்பட மொத்தம் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 914 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருக்கிறது.

Next Story