கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1¾ லட்சத்தை தாண்டியது 107 பேர் பலியான பரிதாபம்


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1¾ லட்சத்தை தாண்டியது 107 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 10 Aug 2020 2:43 AM IST (Updated: 10 Aug 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 5,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1¾ லட்சத்தை கொரோனா தாண்டி உள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 107 பேர் பலியாகி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் 7 ஆயிரத்தை தாண்டியது. அத்துடன் தினமும் 100 பேர் சராசரியாக கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள்.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 3 ஆயிரத்து 91 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 107 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

5,985 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 72 ஆயிரத்து 102 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 5,985 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 87 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 93 ஆயிரத்து 908 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்து 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பெங்களூரு நகரில் 1,948 பேருக்கும், மைசூருவில் 455 பேருக்கும், கலபுரகியில் 194 பேருக்கும், தார்வாரில் 196 பேருக்கும், பல்லாரியில் 380 பேருக்கும், கொப்பலில் 106 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 132 பேருக்கும், பாகல்கோட்டையில் 149 பேருக்கும், உடுப்பியில் 282 பேருக்கும், உத்தரகன்னடாவில் 59 பேருக்கும், பெலகாவியில் 235 பேருக்கும், விஜயாப்புராவில் 129 பேருக்கும், துமகூருவில் 78 பேருக்கும், மண்டியாவில் 63 பேருக்கும், ராய்ச்சூரில் 202 பேருக்கும், பீதரில் 70 பேருக்கும், தாவணகெரேயில் 158 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 95 பேருக்கும், சிக்கபள்ளாப்பூரில் 47 பேருக்கும், கோலாரில் 87 பேருக்கும், சிவமொக்காவில் 149 பேருக்கும், குடகில் 22 பேருக்கும், சித்ரதுர்காவில் 98 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 98 பேருக்கும், ஹாசனில் 168 பேருக்கும், சிக்கமகளூருவில் 113 பேருக்கும், யாதகிரியில் 91 பேருக்கும், ராமநகரில் 38 பேருக்கும், ஹாவேரியில் 80 பேருக்கும், கதக்கில் 114 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

107 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 22 பேரும், மைசூருவில் 12 பேரும், கோலாரில் 8 பேருக்கும், பல்லாரி மற்றும் தாவணகெரேயில் தலா 9 பேரும், ஹாசனில் 7 பேரும், தட்சிண கன்னடா, தார்வாரில் தலா 6 பேரும், பீதர், துமகூரு, கலபுரகியில் தலாவில் 4 பேரும், சித்ரதுர்கா, ராய்ச்சூர், சிவமொக்கா, சிக்கமகளூரு, கொப்பல், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கதக், யாதகிரி, ஹாவேரி, மண்டியாவில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மட்டும் 74 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,240 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களுக்கு பின்பு நேற்று 6 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story