மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர் + "||" + In Bangalore, 3,300 corona patients were caught red-handed giving false information

பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்

பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்
பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினார்கள். போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் உள்ளிட்ட தகவல்களை மாநகராட்சியிடம் கொடுத்து வந்தனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 ஆயிரத்து 327 பேர் கடந்த 7-ந் தேதி வரை சுகாதாரத்துறையின் கைக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்தனர்.

அந்த கொரோனா நோயாளிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பீதி உருவானது. பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பு உறுதியானதும், தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி இருந்தார்கள். பலர் தவறான முகவரியை கொடுத்திருந்ததால் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாலும், சிகிச்சை பெறுவதற்கு ஆஸ்பத்திரிக்கு வராமல் இருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரம் காட்டினார்கள். குறிப்பாக போலீசாரின் உதவியுடன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தவர்கள், தவறான முகவரி கொடுத்துவிட்டு சுற்றி திரிந்தவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்கான முயற்சியில் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் வெற்றியும் கண்டுள்ளனர்.

அதாவது தலைமறைவாக இருந்த 4 ஆயிரத்து 327 பேரில், 3,300 கொரோனா நோயாளிகள் போலீசார் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் ஆஸ்பத்திரியிலும், பலர் கொரோனா மையத்திலும், மேலும் சிலர் வீட்டு தனிமையிலும் வைக்கப்பட்டு உள்ளனர்.

அதாவது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாகி விட்ட மற்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் - மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தகவல்
பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கும் முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
2. பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க இருக்கிறது.
3. டெல்லியில் இன்று மேலும் 3,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: வைரஸ் தொற்று ஏற்பட்ட 16 பச்சிளம் குழந்தைகளும் குணமடைந்தன
பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்ட 16 பச்சிளம் குழந்தைகள் குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
5. பெங்களூருவில் தனி நபராக சென்றால் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை- மாநகராட்சி அறிவிப்பு
பெங்களூருவில் தனி நபராக சென்றால் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...