அரியலூரில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் புதிதாக 19 பேருக்கு தொற்று


அரியலூரில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் புதிதாக 19 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 Aug 2020 10:53 PM GMT (Updated: 29 Aug 2020 10:53 PM GMT)

அரியலூரில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரம்லூரில் புதிதாக 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் நகராட்சி பகுதியைசேர்ந்த 4 பேர் மற்றும் கிராமிய பகுதிகளான பசும்பலூர், திருவாளந்துறை, வி.களத்தூர், அரும்பாவூர், பிலிமிசை, எழுமூர், விஜயகோபாலபுரம், குன்னம், எளம்பலூர், புஜயங்கராய நல்லூர், ரெங்கநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 19 பேரும் பெரம்பலூர், திருச்சி. சிறுவாச்சூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 144 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுள்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 10 பேருக்கும், அரியலூரை சேர்ந்த 6 பேருக்கும், திருமானூரை சேர்ந்த 16 பேருக்கும், செந்துறையை சேர்ந்த 14 பேருக்கும், தா.பழூரை சேர்ந்த 6 பேருக்கும், ஆண்டிமடத்தை சேர்ந்த 6 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 719 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story