சேலம் மாவட்டத்தில் மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Aug 2020 1:23 AM GMT (Updated: 31 Aug 2020 1:23 AM GMT)

சேலம் மாவட்டத்தில் மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 329 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 174 பேர், ஓமலூரில் 3 பேர், மேச்சேரியில் 4 பேர், சங்ககிரியில் 2 பேர், ஆத்தூர் நகராட்சியில் 13 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 3 பேர், கெங்கவல்லியில் 14 பேர், பனமரத்துப்பட்டியில் 7 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 11 பேர், வாழப்பாடியில் 10 பேர், வீரபாண்டியில் 8 பேர், நங்கவள்ளியில் 7 பேர், சேலம் ஒன்றியத்தில் 3 பேர், எடப்பாடி நகராட்சியில் 3 பேர், எடப்பாடி ஒன்றியத்தில் 3 பேர், காடையாம்பட்டியில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 12 பேர், மேட்டூர் நகராட்சியில் 3 பேர் மற்றும் கொங்கணாபுரம், கொளத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

7,156 பேர் குணமடைந்தனர்

மேலும் சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 14 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வந்த 6 பேர், திருச்சியில் இருந்து வந்த 2 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வந்த 2 பேர், கோவை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா ஒருவர் வீதமும், வெளி மாநிலங்களை பொறுத்தவரையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் உள்பட மொத்தம் நேற்று ஒரே நாளில் 329 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 10,583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,156 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3, 284பேர் நோய் தொற்றுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story