மாவட்ட செய்திகள்

திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சம் கொள்ளை + "||" + Rs 20 lakh robbery at industrialist's house in Tindivanam

திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சம் கொள்ளை

திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சம் கொள்ளை
திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திண்டிவனம்,

திண்டிவனம் ஜெயபுரம் 2-வது தெருவில் வசிப்பவர் செந்தில் சங்கர்(வயது 49). தொழில் அதிபரான இவர், திண்டிவனத்தில் பாரத் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மேலும் சென்னையில் ஓட்டல்களும் நடத்தி வருகிறார். செந்தில்சங்கர், கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் கோவில்பட்டிக்கு சென்றார்.


நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.

பணம் கொள்ளை

பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 600-ஐ காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
திருச்சியில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை கொள்ளை
கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்த முகமூடி அணிந்த நபர், வங்கியிலும் திருட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கடையம் அருகே பரபரப்பு அங்கன்வாடி பணியாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கடையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. மண்டியா கோவிலில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் 3 பூசாரிகள் கொலை-பணம் கொள்ளை
மண்டியா அருகே நள்ளிரவில் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 3 பூசாரிகளை கொன்றுவிட்டு உண்டியல் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. மதுரவாயல் அருகே சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் 40 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.