நங்கநல்லூரில் மின்கம்பம் வெடித்து தீ விபத்து-மின்தடையால் பொதுமக்கள் அவதி


நங்கநல்லூரில் மின்கம்பம் வெடித்து தீ விபத்து-மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 Sept 2020 5:15 AM IST (Updated: 16 Sept 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி முதல் குறுக்கு தெருவில் உள்ள சாலையோர மின் கம்பம் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி முதல் குறுக்கு தெருவில் உள்ள சாலையோர மின் கம்பம் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. 

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நங்கநல்லூர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரி செய்தனர். இதையடுத்து 1 மணி நேரத்திற்கு பின்னர், மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து ஆய்வு செய்ததில், மின்சார கம்பத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் மின்வடத்தில் போடப்பட்டிருந்த இணைப்பு பலவீனமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story