தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sept 2020 7:37 AM IST (Updated: 21 Sept 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் வசிக்கும் 32 வயது கால்நடை டாக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 45 வயது வங்கி அலுவலர், தர்மபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 43 வயது வங்கி அலுவலர், அரூர் அருகே கொளகம்பட்டியை சேர்ந்த 51 வயது கூட்டுறவு வங்கி செயலாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாலக்கோடு அருகே சோட்டாண்டப்பட்டியைச் சேர்ந்த 26 வயது போலீஸ்காரர், பண்டஅள்ளி பகுதியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆகியோருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

2,355 ஆக அதிகரிப்பு

இதேபோல் சூடப்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனியார் நிதி நிறுவன ஊழியர் உள்பட மாவட்டம் முழுவதும் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களை சேர்த்து மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,355 ஆக அதிகரித்துள்ளது.

Next Story