திருவாரூரில், ஆன்லைனில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


திருவாரூரில், ஆன்லைனில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Sep 2020 1:15 PM GMT (Updated: 23 Sep 2020 1:00 PM GMT)

திருவாரூரில் ஆன்லைன் மூலமாக தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி எல்லோரும் நம்முடன் எனும் திட்டத்தில் தமிழகமெங்கும் ஆன்லைன் மூலமாக கட்சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் எம்.எல்.ஏ. அலுவலக வாசலில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு உடனடியாக கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது பூண்டி கே.கலைவாணன் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி எல்லோரும் நம்முடன் எனும் ஆன்லைன் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது, இதில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்று வருகின்றனர். வருங்கால தமிழகத்தை வலுப்படுத்த வேண்டுமானால் தி.மு.க.வால் தான் முடியும் என்பதை உணர்ந்து கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இதேபோன்று வார்டு, ஊராட்சி வாரியாக வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர்் சங்கர், நகரசபை முன்னாள் துணை தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதா சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story