மராட்டியத்தில் கொரோனாவுக்கு 430 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனாவுக்கு 430 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 14 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 66 ஆயிரத்து 129 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 10 லட்சத்து 69 ஆயிரத்து 159 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 60 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது. நேற்று மாநிலத்தில் புதிதாக 430 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 181 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை, புனே
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 1,713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 614 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மேலும் 49 பேர் பலியானதால் அங்கு வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 883 ஆகி உள்ளது.
புனே மாநகராட்சி பகுதியில் மேலும் 1,005 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 98 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story