நூல் கோன் தயாரிக்கும் காகித அட்டை விலை உயர வாய்ப்பு பேப்பர் அண்ட் போர்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல்
நூல் கோன் தயாரிக்கும் பேப்பர் விலை உயர வாய்ப்பு உள்ளதாக பேப்பர் அண்ட் போர்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறினார்.
ஈரோடு,
பேப்பர் அண்ட் போர்டு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் ஓ.என்.செங்கோட்டுவேலவன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில், நூல் கோன் தயாரிக்கும் காகித அட்டை விலை உயர்த்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சங்க தலைவர் ஓ.என்.செங்கோட்டுவேலவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட காகித அட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காகித அட்டை மூலம் பல்வேறு பொருட்களை பேக்கிங் செய்தவற்கான பெட்டிகள் மற்றும் நூல் சுற்றி வைப்பதற்கான கோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விலை உயர்வு
கொரோனா ஊரடங்கு காரணமாக காகித அட்டை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை வெளிநாடுகளில் கடுமையாக உயந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து மூலப்பொருட்களை வாங்கி காகித அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணங்களுக்காக பெட்டிகள் மற்றும் நூல் கோன்கள் தயாரிக்க பயன்படும் காகித அட்டையின் விலை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சங்க நிர்வாகிகள் சீனிபாண்டியன், ஜெயபாலன், ராஜா, சுந்தர் ராஜன், கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story