வளசரவாக்கத்தில் டெலிவிஷன் நடிகர்-நடிகை மீது வீடு புகுந்து தாக்கிய பெண்


வளசரவாக்கத்தில் டெலிவிஷன் நடிகர்-நடிகை மீது வீடு புகுந்து தாக்கிய பெண்
x
தினத்தந்தி 12 Oct 2020 10:30 PM GMT (Updated: 12 Oct 2020 7:23 PM GMT)

வளசரவாக்கத்தில் டெலிவிஷன் நடிகர்-நடிகை மீது வீடு புகுந்து பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பூந்தமல்லி, 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் காமெடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள வீட்டில் டெலிவிஷன் நடிகை சீபா உள்ளிட்டோருடன் இணைந்து யூடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டிற்குள் தனது ஆட்களுடன் புகுந்த சூர்யா தேவி, நடிகர் நாஞ்சில் விஜயன், நடிகை சீபா மற்றும் வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் நடிகை சீபா இருவரும் காயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்த வீடியோவில் பேசிய நாஞ்சில் விஜயன், நடிகை வனிதா விஜயகுமார் திருமணத்தின்போது சூர்யாதேவிக்கும், வனிதாவுக் கும் இடையே யூடியூப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வனிதா விஜயகுமாருக்கு துணையாக இருந்ததாக கூறி சூர்யாதேவி ஆட்களுடன் வீடு புகுந்து எங்களை தாக்கிவிட்டு சென்றதாக பதிவிட்டு இருந்தார்.

நாஞ்சில் விஜயன் மற்றும் நடிகை சீபா இருவரும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாஞ்சில் விஜயன் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story
  • chat