திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.
கோவில்பட்டி,
கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துறையினர் பாதிக்கப்படாத வகையில், படிப்படியாக தளர்வுகள், சலுகைகளை தமிழக அரசு வழங்கியது. திரையரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கை களையும் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நிறைவேற்றினார்.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பராமரிப்பு கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு வரைமுறைப்படுத்தி உள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு தீர்வு கண்டது. இதனால் திரைப்படத்துறை புத்துணர்வு பெற்றது.
மீண்டும் திறப்பது எப்போது?
திரையரங்குகளை மீண்டும் திறக்கும்போது, 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. திரையரங்குகளை உடனே திறந்தால் நடைமுறையில் பிரச்சினைகள் எழும்.
எனவே, மத்திய அரசு வழங்கிய நடைமுறைகளை அமல்படுத்தி, திரையரங்குகளை மீண்டும் திறப்பது பற்றி வருகிற 20-ந்தேதி அல்லது 21-ந் தேதியில் திரையரங்கு உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து முதல்- அமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், அன்றே திரையரங்குகள் திறக்கப்படும் தேதி குறித்து முடிவு செய்யப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story