மாவட்ட செய்திகள்

விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது + "||" + 4 arrested for vehicle theft in Vijayapura

விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.
விஜயாப்புரா, 

விஜயாப்புரா (மாவட்டம்) டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில்அவர்கள் மவுனேஷ் படிகேரா (வயது 28), நிங்கப்பா பூஜார் (38), மீராஷாப் பளிகார் (24), மெகபூப் பளிகார் (28) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் விஜயாப்புரா டவுன், புறநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் வீடுகள், வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிளை திருடுவார்கள். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை 4 பேரும் ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு இவ்வாறு திருட்டு சம்பவங்களில் 4 பேரும் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பகுதிகளில் திருடிய 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் விஜயாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு.
2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது
திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது
கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.