டி.கே.ரவியின் பெயரை குசுமா பயன்படுத்தக்கூடாதா? ஷோபா எம்.பி.க்கு டி.கே.சிவக்குமார் கண்டனம்


டி.கே.ரவியின் பெயரை குசுமா பயன்படுத்தக்கூடாதா? ஷோபா எம்.பி.க்கு டி.கே.சிவக்குமார் கண்டனம்
x
தினத்தந்தி 24 Oct 2020 3:35 AM IST (Updated: 24 Oct 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.ரவியின் பெயரை குசுமா பயன்படுத்தக்கூடாது என்று கூறிய ஷோபா எம்.பி.க்கு டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பாறையை உடைத்து பொடி பொடி ஆக்குவதாக என்னை பற்றி கூறியுள்ளார். நான் ஒன்றும் பாறை அல்ல, கனகபுரா பாறை அல்ல. பாறை என்பது ஒரு இயற்கை. அந்த பாறையை உடைத்தால் பூஜை செய்வது நமது வழக்கம். என் மீது உள்ள அன்பின் காரணமாக மக்கள் என்னை பாறை என்று அழைக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே.ரவியை குசுமா அக்னி சாட்சிப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் டி.கே.ரவியின் பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது என்று பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி. கூறுவது நியாயமா?. இதை கண்டிக்கிறேன். மக்களுக்கு நல்ல நிழல் கிடைக்க வேண்டும் என்று விதைகளை விதைக்கிறோம். ஆனால் சிலர் ஏதேதோ ஆக்கிவிடுகிறார்கள். நாங்கள் ஒரு படித்த பெண்ணுக்கு ராஜராஜேஸ்வரிநகரில் டிக்கெட் வழங்கியுள்ளோம். அவரை தனது கணவரின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஷோபா கூறுகிறார். அவர் அந்த இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறு அவர் சொல்லியிருப்பாரா?.

பதவி இறக்கம்

என்னை பற்றி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஆர்.அசோக், சி.டி.ரவி ஆகியோர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அவர்களை நான் மறந்து விட்டிருந்தேன். இப்போது என்னை பற்றி பேசுவதால் அவர்கள் எனது நினைவுக்கு வந்துள்ளனர். மந்திரி ஆர்.அசோக்கிற்கு ஏற்கனவே பதவி இறக்கம் வழங்கப்பட்டுள்ளது. என்னை விமர்சித்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர் இவ்வாறு பேசுகிறார். அவர்கள் பேசுவதை பற்றி நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story