மந்திரி திலீப் வல்சே பாட்டீலுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட 16-வது மந்திரி


மந்திரி திலீப் வல்சே பாட்டீலுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட 16-வது மந்திரி
x
தினத்தந்தி 29 Oct 2020 9:30 PM GMT (Updated: 29 Oct 2020 8:54 PM GMT)

மராட்டிய கலால் துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் ஏற்கனவே 14 மந்திரிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை துணை முதல்-மந்திரி அஜித்பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான திலீல் வல்சே பாட்டீல் நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானார். 63 வயதான இவர் கலால் மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஆனாலும் நலமாக உள்ளேன். முன்னெச்சரிக்கையாக டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்“ என்று தெரிவித்து உள்ளார்.

திலீப் வல்சே பாட்டீல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதன் மூலம் மராட்டியத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவாரையும் சேர்த்து இதுவரை 16 மந்திரிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story