வண்ணாரப்பேட்டையில் சிறுமியை துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 10 பேர் கைது
வண்ணாரப்பேட்டையில் சிறுமியை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விபசார புரோக்கர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னையை அடுத்த கோவளத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது 15 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்து செல்லுமாறு கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் தனது உறவினரான வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு (வயது 22) என்பவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தநிலையில் மகளை அழைத்து சென்ற உறவினர் சகிதாபானு, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாகவும், மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சகிதா பானுவிடம் விசாரணை நடத்தியதில், வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்த மதன்குமார் (35) என்பவருக்கும் சகிதாபானுவுக்கும் பழக்கம் இருப்பதும், இவர்கள் இருவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.
புரோக்கர்கள் 10 பேர் கைது
மேலும் விசாரணையில், மதன் குமாரின் தாயார் செல்வி (50), அவரது தங்கை சத்தியா (23) ஆகியோர் 15 வயது சிறுமியை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட விபசார புரோக்கர்களை தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த கார்த்திக் (25) திருவொற்றியூரை சேர்ந்த மகேஸ்வரி (29), வனிதா (35), எண்ணூரைச் சேர்ந்த ஈஸ்வரி (19), பூந்தமல்லியைச் சேர்ந்த விஜயா (45), திலீப் (25) உள்பட விபசார புரோக்கர்கள் உள்பட 10 பேரையும் அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு சென்னையில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story