திருப்பூர் மாநகரில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
திருப்பூர் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேரை பணியிடமாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த ஜெய்சங்கர் வடக்கு போலீஸ் குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கந்தசாமி திருமுருகன் பூண்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜன் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், திருமுருகன்பூண்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜன்பாபு திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சொர்ணவல்லி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுபோல் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஜானகிராம் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த தினேஷ் திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story