மாவட்ட செய்திகள்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேருக்கு கொரோனா + "||" + Corona for 25 new people in Tenkasi, Thoothukudi and Nellai

தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேருக்கு கொரோனா

தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேருக்கு கொரோனா
தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 314 ஆக உயர்ந்தது.

இதில் 14 ஆயிரத்து 985 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது கொரோனாவுக்கு 118 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனாவால் 211 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி- தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 277 ஆக உயர்ந்தது. இவர்களில் 8 ஆயிரத்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது 49 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 158 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 92 ஆக அதிகரித்தது. இதில் 15 ஆயிரத்து 867 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 84 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில், கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி
அமீரகத்தில், கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி.
2. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 97.33 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 97.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
3. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் பலி புதிதாக 11,610 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனாவால் மரணித்தபோதும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு மரணமும் பதிவாகவில்லை.
4. 9 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 இங்கிலாந்து பயணிகளுக்கு புதிய வகை கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து வந்த 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 இங்கிலாந்து பயணிக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதுகாப்பு விதிமீறல் சுற்றுலா நிறுவனம் மூடல்;50 ஆயிரம் திர்ஹாம் அபராதம்
துபாய் நகரின் பாலைவனப் பகுதி ஒன்றில், சுற்றுலா நிறுவனம் ஒன்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நகர் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நிறுவனத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு சுற்றுலா நிறுவனம் முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்தது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை.