புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி + "||" + Very low corona exposure in Pondicherry; Today 16 people were confirmed infected
புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,146 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,611 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இன்று 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை புதுச்சேரியில் 37,683 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 286 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.