தி.மு.க. ஆட்சி வந்ததும் நெசவாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு


தி.மு.க. ஆட்சி வந்ததும் நெசவாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2021 6:02 PM GMT (Updated: 22 Jan 2021 6:02 PM GMT)

தி.மு.க. ஆட்சி வந்ததும் நெசவாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கனிமொழி எம்.பி. பேசினார்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கீழஈரால், எட்டயபுரம் ஆகிய ஊர்களில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. எட்டயபுரம் மெயின் பஜாரில் நடந்த கூட்டத்திற்கு வருகைதந்த கனிமொழி எம்.பி.க்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தலைமையில், விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலையில் நையாண்டி மேளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தன்னை போலவே செல்லாக்காசு பரிசு கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் இனியும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. தமிழ்நாட்டில் 23 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் இந்த பிரச்சினை மட்டுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சவுந்தரராஜன், நகர செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் பரமசிவம், கல்லடிவீரன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (கிழக்கு), மும்மூர்த்தி (மேற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடம்பூர்

கடம்பூரில் காமராஜர் சிலை அருகே நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த கனிமொழி எம்.பி., காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ஜெகன், கோவில்பட்டி ராமர், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், கடம்பூர் நகர செயலாளர் ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி தேவசகாயம் பவுன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நடந்த சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து வள்ளுவர் நகரில் உள்ள கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி. தொழிலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் மந்தித்தோப்பில் திருநங்கைகள் நிர்வகிக்கும் பால்பண்ணையை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார்.

மாலையில் கோவில்பட்டி கிருஷ்ண நகரில் உள்ள அரசு ஆக்கி மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் 450 வீரர்களுக்கு ஆக்கி மட்டைகளை வழங்கினார். பின்னர் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். அங்கு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை சந்தித்து பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், விவசாய தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சூர்யராஜ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தனம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story