காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி


காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
x
தினத்தந்தி 31 Jan 2021 12:13 AM GMT (Updated: 31 Jan 2021 12:13 AM GMT)

காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி திருச்சி தெப்பக்குளம் அருகில் மெயின் கார்டுகேட் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக அதன் மாவட்டத்தலைவர் வின்சென்ட் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதே போல திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நிர்வாகிகள் ரெக்ஸ், சுப.சோமு உள்பட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Next Story