அரசு மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா


அரசு மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா
x
தினத்தந்தி 31 Jan 2021 5:45 AM GMT (Updated: 31 Jan 2021 5:45 AM GMT)

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.

பெரம்பலூர்,
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர் திருமால் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறையின் உதவி திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி, தேசிய சுகாதாரத்துறை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் சுதாகர் திட்டம் குறித்து விளக்கி பேசினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் தொழுநோயாளிகள் சிறப்பிக்கப்பட்டனர். தொழுநோய் விழிப்புணர்வு பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் அலுவலகத்தின் நலக்கல்வியாளர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். முடிவில் லெப்பைகுடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார்.

Next Story