டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 487 மதுபாட்டில்கள் திருட்டு


மதுபாட்டில்கள் திருடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் விசாரணை நடத்திய போது எட
x
மதுபாட்டில்கள் திருடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் விசாரணை நடத்திய போது எட
தினத்தந்தி 31 Jan 2021 5:49 AM GMT (Updated: 31 Jan 2021 5:49 AM GMT)

திருப்பாச்சேத்தி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 487 மதுபாட்டில்கள் திருடப்பட்டன.

திருப்புவனம், 

திருப்பாச்சேத்தி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 487 மதுபாட்டில்கள் திருடப்பட்டன.

டாஸ்மாக் கடை பூட்டு உடைப்பு
திருப்பாச்சேத்தி அருகே பிச்சைபிள்ளை ஏந்தல் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளர்களாக முருகன், ராமர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டிச்செல்வம் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வந்து சிறிய கடப்பாரை மற்றும் உளி மூலம் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மதுபான பெட்டிகளை திருடிச் சென்றுள்ளனர். 
487 மதுபாட்டில்கள் திருட்டு
இந்த நிலையில் நேற்று கடையை திறக்க வந்த விற்பனையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வந்து கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 
தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பக்ருதீன், நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ நடந்த கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்களும் பரிசோதனை செய்துள்ளனர்.
பின்னர் மதுக்கடை பணியாளர்கள் கணக்கு பார்த்ததில் 487 மதுபாட்டில்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் ஆண்டிச்செல்வம் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டு நடைபெற்றுள்ள கடையின் பூட்டை உடைக்க பயன்படுத்திய சிறிய கடப்பாரை மற்றும் உளி ஆகியவை மதுக்கடை அருகே கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். 
திருடுபோன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.94 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story