திருச்சியில் கட்டப்பட்டு வரும் 3 மணி மண்டபங்களை தேர்தலுக்கு முன்பாக திறக்க ஏற்பாடு


திருச்சியில் கட்டப்பட்டு வரும் 3 மணி மண்டபங்களை தேர்தலுக்கு முன்பாக திறக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 31 Jan 2021 11:43 PM GMT (Updated: 2021-02-01T05:20:18+05:30)

திருச்சியில் கட்டப்பட்டு வரும் 3 மணி மண்டபங்களை தேர்தலுக்கு முன்பாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர், நீதிக்கட்சி தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், நடிகர் தியாகராஜ பாவதர் ஆகியோருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இவற்றின் கட்டுமான பணிகளை நேற்று அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில் இந்த 3 மணி மண்டபங்கள் கட்டுமான பணியும் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்து விட்டன. தேர்தலுக்கு முன்பாக இவற்றை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தினால் கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்றார்.

Next Story