செங்குத்து பூங்காக்களை சீரமைக்க தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு
செங்குத்து பூங்காக்களை சீரமைக்க தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் பசுமை பரப்பரை அதிகரிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மேம்பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காக்களை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நிதிசுமை இல்லாமல் இருக்க பெரு வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் தத்தெடுத்து பராமரிப்பு மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனர். அவ்வாறு தத்தெடுத்து பராமரிக்க முன்வருபவர்களுக்கு பிணை வைப்புத் தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தத்தெடுக்க முன்வரும் நிறுவனங்கள் அல்லது அமைப்பின் பெயர் பலகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிகளுக்கு உட்பட்டு வைக்க அனுமதி வழங்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய ரிப்பன் மாளிகையில் நேரில் அணுகியோ அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் மூலம் வரும் 26-ந்தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story