தென்காசி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா


தென்காசி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 26 Feb 2021 2:05 AM IST (Updated: 26 Feb 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகிரி, பிப்:
தென்காசி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பனவடலிசத்திரம்-சிவகிரி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா தென்காசி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மானூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நெல்லை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் தர்மராஜ், ஒன்றிய இளைஞரணி செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சண்முகநல்லூர், குருக்கள்பட்டி, மேலநீலிதநல்லூர், ஆயாள்பட்டி, ஆராய்ச்சிபட்டி, திருமலாபுரம், பனவடலிசத்திரம், மருக்காலங்குளம், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், கூவாச்சிபட்டி, புளியம்பட்டி, அச்சம்பட்டி, மூவிருந்தாளி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகிரி பஸ் நிலையம் அருகில் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்- செங்கோட்டை

சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகில் தென்காசி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ரமேஷ், செல்வராஜ், கூட்டுறவு பேரங்காடி துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அறிவுரையின்பேரில், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் தங்கவேலு, நகர பொருளாளர் ராஜா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story