‘அகில இந்திய மக்கள் கட்சி’ என்ற பெயரில் தி.மு.க. பேச்சாளர் தொடங்கிய புது இயக்கம் கொடியும் அறிமுகம்


‘அகில இந்திய மக்கள் கட்சி’ என்ற பெயரில் தி.மு.க. பேச்சாளர் தொடங்கிய புது இயக்கம் கொடியும் அறிமுகம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:04 PM GMT (Updated: 25 Feb 2021 10:04 PM GMT)

‘அகில இந்திய மக்கள் கட்சி’ என்ற பெயரில் தி.மு.க. பேச்சாளர் புது இயக்கத்தை தொடங்கினார்.

திருச்சி, 
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்தவர் கவிஞர் கோ.அண்ணாதுரை. இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை தி.மு.க.வின் பேச்சாராக இருந்தவர். அவர், நேற்று திருச்சியில் அகில இந்திய மக்கள் கட்சி என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். மேலும் கட்சியின் கொடியையும் தலைவர் அண்ணாதுரை அறிமுகம் செய்தார். அவருடன் மாநில ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார் மற்றும் சிலர் பங்கேற்றனர்.
புதுக்கட்சி குறித்து அண்ணாதுரை கூறுகையில், ‘தி.மு.க. வில் அடிப் படையே சரியில்லை. அங்கு உரிய மரியாதை இல்லை என்பதால் வெளியேறி புதுக்கட்சியை நானே தொடங்கி இருக்கிறேன். தேர்தலில் எங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அது தொடர்பாக திருக்கடையூரில் விரைவில் அறிமுகக்கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையும், நிர்வாகிகள் நியமனமும் இருக்கும். கட்சியின் கொள்கை, திட்டங்கள் அறிவிக்கப்படும். தொடர்ந்து தி.மு.க., அதி.மு.க.விற்கு எதிராக பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Next Story