தலைவாசல் அருகே சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி விவசாயி பலி மனைவி படுகாயம்


தலைவாசல் அருகே சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி விவசாயி பலி மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:07 PM GMT (Updated: 25 Feb 2021 10:07 PM GMT)

தலைவாசல் அருகே சாலையின் நடுவே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

தலைவாசல்:
தலைவாசல் அருகே சாலையின் நடுவே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). விவசாயி. இவரது மனைவி சிந்தாமணி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு நேற்று மதியம் 2 மணிக்கு சிவக்குமார் மனைவியுடன் காரில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
விபத்தில் பலி
தலைவாசல் அருகே சாமியார்கிணறு பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் விவசாயி சிவக்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மனைவி சிந்தாமணியும் படுகாயம் அடைந்தார். இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிவக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிந்தாமணி மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story