வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சவரத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சவரத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 10:54 PM IST (Updated: 26 Feb 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சவரத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சவரத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, அரசு வேலைவாய்ப்பில் எங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும். மேலும் எங்களுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 

5 சதவீத இட ஒதுக்கீடு செய்து எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்கு எங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர். இதில் செயலாளர் ஜெயக்குமார், பொறுப்பாளர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story