திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்


திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2021 6:02 PM GMT (Updated: 26 Feb 2021 6:02 PM GMT)

திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த காந்தி மகள் சத்யா(வயது 20) இவர் அரகண்டநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சத்யா நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சத்யாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

பின்னர் விசாரித்தபோது தகடி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சக்திவேல், இவரது மகன் பூவரசன், மனைவி ஜெயலட்சுமி ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்யாவை மும்பைக்கு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காந்தி கொடுத்த புகாரின்பேரில் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சக்திவேல், பூவரசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story