குமரி, திருவனந்தபுரம் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம்


குமரி, திருவனந்தபுரம் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 8:21 PM GMT (Updated: 26 Feb 2021 8:21 PM GMT)

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.

நாகர்கோவில், 
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் முன்னேற்பாடு 
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கை தொடர்பாக குமரி மாவட்டத்திற்கும், கேரள எல்லையான திருவனந்தபுரம் மாவட்டத்திற்கும் இடையே கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள் குறித்து இருமாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர்கள் 
கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா ஆகியோர் தலைமை தாங்கினர். தேர்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தலின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.கே.மது, குமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கேரள மாநிலம் நெடுமங்காடு சப்-கலெக்டர் சேத்தன்குமார் மீனா, குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, உதவி ஆணையர் (ஆயம்) சங்கரலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவன், உதவி கலெக்டர் (பயிற்சி) ரி‌ஷாப், துணை கலெக்டர் (பயிற்சி) சரவணன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பீட்டர்பால், பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story