மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் பெரிய தேரோட்டம்


மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் பெரிய தேரோட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 2:51 AM IST (Updated: 27 Feb 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் பெரிய தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேச்சேரி:
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் பெரிய தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மாசிமக தேர் திருவிழா பத்ரகாளியம்மன் கோவிலின் தாய்வீடான பொங்க பாலியிலிருந்து சக்தி அழைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை கோவிலில் இருந்து தொடங்கியது. விநாயகர் தேர், சின்ன தேர் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை அடைந்தது.
வாணவேடிக்கை
நேற்று விநாயகர் தேரும், பெரிய தேரும் கோவிலில் இருந்து தொடங்கி மேற்கு ரத வீதி கிராம சாவடி அருகில் நிறுத்தப்பட்டது. இன்று (சனிக்கிழமை) கிராம சாவடியில் இருந்து விநாயகர் தேர், பெரிய தேர் கோவிலை அடைதலும் நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சத்தாபரணம் நடக்கிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் பொங்க பாலியிலிருந்து வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

Next Story