தேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம சாவு


தேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 26 Feb 2021 9:28 PM GMT (Updated: 26 Feb 2021 9:28 PM GMT)

தேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம முறையில் இறந்தது

தேவூர்:
தேவூர் அருகே ஓக்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). இவரது மனைவி சரண்யா (35). இந்த தம்பதிகளுக்கு கன்னிகா (10), தர்சினா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் மூன்றாவதாக பவானிக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையை ஒக்கிலிப்பட்டி பகுதியில் வீட்டில் வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. இதனையடுத்து பெண் குழந்தையை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் அந்த பெண் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். குழந்தை மர்ம சாவு குறித்து தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story