திருப்பூர் மாவட்டத்தில் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 27 Feb 2021 6:20 PM GMT (Updated: 27 Feb 2021 6:20 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
கோவை சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா நீலகிரி மாவட்டம் குன்னூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகண்ணன் நீலகிரி மாவட்டம் செரம்பாடி சர்க்கிள் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்தநாயகி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த அன்னம் கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்டம் மயிலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கவிதாலட்சுமி திருப்பூர் மாவட்டம் தளிபோலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த அம்சவேணி நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை மாநகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சக்திவேல் அவினாசி சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அவினாசி சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அருள் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து
ஈரோடு மாவட்ட நக்சலைட் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ரவி திருப்பூர் மாவட்ட நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கோவை மாநகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகுமார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்டம் பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அன்புசெல்வி தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த யசோதாதேவி நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நர்மதாதேவி தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேஷ்வரி நீலகிரி மாவட்டம் பொதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுமதி திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ் பெருமாநல்லூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முருகன் நீலகிரி மாவட்டம் கூடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் பிறப்பித்துள்ளார்.

Next Story