தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு


தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 6:36 PM GMT (Updated: 27 Feb 2021 6:36 PM GMT)

தேர்தலை புறக்கணிக்க போவதாக வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட தாழானூர் ஊராட்சியில், பரிவீர மங்களம் ஆதிதிராவிட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் 3 முறை மனு அளித்தும், முதல்-அமைச்சருக்கு 2 முறையும், ஆதிதிராவிட அமைச்சருக்கு 2 முறையும், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு 10 முறையும் மனு கொடுத்து உள்ளோம். அதன் பிறகு பொதுமக்கள், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு பஸ் மறியல் செய்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு கமிட்டி அமைத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக விளம்பர பதாகை ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வைத்துள்ளனர். அந்த பதாகையில், இந்த முறை நிச்சயம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று கூறியுள்ளனர். இந்த பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் இ்ங்கு விளம்பர பதாகை வைக்க கூடாது, உங்கள் ஊருக்கு கொண்டு சென்று வையுங்கள் என்று கூறினர். பின்னர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்று விளம்பர பதாகையை வைத்தனர்.

Next Story